சத்தான கேரட் அல்வா செய்வது இப்படித்தான்….

By Staff

Published:


8b3579df55af5cf5bb6046fd11ba0c1c

எல்லாருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு என்றால் அது அல்வாதான். ஆனா, அதை வீட்டில் செய்வது கடினமென்று பெரும்பாலும் பெண்கள் அதை செய்வதில்லை. மிகமிக சுலபமாகவும்,சத்தானதாகவும் வீட்டிலேயே அல்வாவினை செய்யமுடியும். சத்தாய், சுவையாய், சுலபமாய் கேரட் அல்வா செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்….

கேரட் – 1/2கிலோ

சர்க்கரை – 300கிராம்

பால் – 200 மிலி

நெய்- 100

ஏலக்காய் பொடி – சிறிதளவு

முந்திரி -10

திராட்சை -10

fe443e4c9355660ada687cf3e3aa40ba-1

செய்முறை..

அடிகனமான வாயகன்ற ஒரு பாத்திரத்தினை அடுப்பிலேற்றி சிறிது நெய்யினை உருக்கி, அதில் முந்திரி திராட்சையினை வறுத்தெடுத்து வைத்துக்கொள்ளவும். மிச்சமிருக்கும் நெய்யினை ஊற்றி, அதில் துருவிய கேரட்டினை கொட்டி நன்றாக வதக்கவும். கேரட் வதங்கியதும் பால் சேர்த்து வேகவிடவும். கேரட் பச்சை வாசனை போனதும் சர்க்கரையை கொட்டி கிளறவும். கேரட் சுருண்டு வரும்போது ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, திராட்சையினை சேர்த்து வதக்கி, அல்வா பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்…

விருப்பப்பட்டால் சிறிது குங்குமப்பூ, பிஸ்தா பருப்பு, கண்டென்ஸ்டு மில்க்கும் சேர்க்கலாம். புட் கலர் சேர்ப்போரும் உண்டு…

Leave a Comment