தேவையான பொருட்கள்..
ரவை – ½ கிலோ
சர்க்கரை – ½ கிலோ
நெய் – 6 ஸ்பூன்
முந்திரி பருப்பு – 50 கிராம்
தேங்காய் – 1
ஏலக்காய் – 12
பால் – 250 மில்லி லிட்டர்
செய்முறை…
வாணலியை அடுப்பிலேற்றி முந்திரிபருப்பு, திராட்சையை நெய்யில் வறுத்துக்கொள்ளவேண்டும். இரண்டும் சிவந்ததும் ரவையை அதிலேயே கொட்டி லேசாக வறுக்க வேண்டும். ரவையோடு சர்க்கரையை சேர்த்து வறுக்கவும். ஏலக்காய் பொடியை சேர்க்கவும். இன்னொரு பக்கம் பாலை காய்ச்சவும்.
வறுத்த ரவை, சர்க்கரை கலவையை வேறொரு தட்டில் சூடான பாலை கொஞ்சம் கொஞ்சமா தெளித்து உருண்டைகளாக பிடிக்கவும். சூடான சுவையான லட்டு தயார். நன்றாக ஆறியதும் காற்று புகாத டப்பாவில் சேமிச்சு வைக்கலாம். பால் சேர்த்திருப்பதால் ஒரு வாரம் வரையே தாங்கும்.
குறிப்பு… பால் சேர்க்காமலும் செய்யலாம். ஆனா, நெய் அதிகமா பிரிக்கும். ரவையை நெய்யில் வறுத்து ஆறியதும் மிக்சியில் பொடிச்சும் சேர்க்கலாம். அவ்வாறே சர்க்கரையையும் பொடிச்சும் சேர்க்கலாம். விருப்பப்பட்டால் தேங்காய் துருவல், டூட்டி ஃப்ரூட்டியும் சேர்க்கலாம்.