சாமைக் காரப் புட்டு ரெசிப்பி!!

By Staff

Published:

2821daefe1017a734185e6de4404ebef-2-2

தேவையானவை :
சாமை அரிசி மாவு – 1 கப்
தக்காளி  – 1,
சின்ன வெங்காயம்  – 10,
காய்ந்த மிளகாய் – 4,
கடுகு – ½ ஸ்பூன்,
உளுந்து – 1 ஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்,
சீரகம் – 1 ஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
எண்ணெய் – தேவையான அளவு,

செய்முறை :
1. சின்ன வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து சாமை அரிசி மாவுடன் சீரகம், உப்பு கலந்து பிசைந்து ஆவியில் வேகவிட்டுக் கொள்ளவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
4. அடுத்து சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு, சாமைப் புட்டு சேர்த்து நன்கு வதக்கினால் சாமைக் காரப் புட்டு ரெடி. 
 

Leave a Comment