ரோட்டுக் கடைகளில் பெரும்பாலும் பொதுமக்களால் விரும்பி வாங்கிச் சாப்பிடப் படும் உணவு வகை சிக்கன் ரைஸ் ஆகும்.
தேவையானவை:
பாசுமதி அரிசி – 1 கப்
வெங்காயம் – 3
கோழி – ½ கிலோ
முட்டை -3
கேரட் – 2
பீன்ஸ் – 15
வெங்காயத் தாள் – 1
குடைமிளகாய் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
சில்லி சாஸ் – 1 மேஜைகரண்டி
சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி
மிளகுத் தூள்-1 மேசைக்கரண்டி
நெய் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. குடைமிளகாய், வெங்காயம், பீன்ஸ், வெங்காயத்தாள், கேரட் போன்றவற்றினைப் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். சில்லி சிக்கனை தனியாக ரெடி செய்து கொள்ளவும்.
2. அடுத்து சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.
3. வாணலியில் நெய் ஊற்றி வெங்காயம், வெங்காயத்தாள், குடை மிளகாய், கேரட், மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அடுத்து அதில் முட்டையினை உடைத்து ஊற்றி வதக்கவும்.
4. அடுத்து சில்லி சிக்கன், உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகுத் தூள் சேர்த்து வேகவிட்டு சாதத்தைப் போட்டு கிளறி இறக்கினால் சிக்கன் ரைஸ் ரெடி.