கணவாய் கடலில் கிடைக்கும் மிக பிரபலமான உணவுப் பொருள் ஆகும். சத்துக்கள் நிறைந்த இந்த கணவாய் மிகவும் சுவையான உணவும் கூட. இந்த கணவாய் மீனில் ஒமேகா 3 அமிலம் உள்ளது. அதிகமான அளவில் கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து உள்ளது. இந்த கணவாய் மீனில் எப்படி சுவையான கணவாய் மீன் வடை செய்யலாம் என்பதை பார்ப்போம்.
முதலில் கால் கிலோ அளவு கணவாய் மீனை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 2 பிரட் துண்டுகளை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
சத்துக்கள் நிறைந்த சாமை கற்கண்டு பொங்கல்.. ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்…!
பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த கணவாய் மீன், பொடியாக நறுக்கிய 1 பெரிய வெங்காயம், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் மிளகாய்த் தூள், 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது இதனை வட்ட வடிவில் வடை போல தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை பிரட் துகளில் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் தட்டி வைத்திருக்கும் வடையை ஒவ்வொன்றாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான வித்தியாசமான கணவாய் மீன் வடை தயாராகி விட்டது.