ரவா லட்டு 10 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு ரெசிப்பியாகும். இதனை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் நிச்சயம் விரும்பிச் சாப்பிடுவர்.
தேவையானவை:
ரவை – 250 கிராம்
சர்க்கரை – 300 கிராம்
நெய் – 20 மில்லி
முந்திரி – 10
தேங்காய் துருவல்- கால் கப்
ஏலக்காய்த் தூள் – 2 ஸ்பூன்
பால் – கால் லிட்டர்
செய்முறை:
1. வாணலியில் நெய் விட்டு ரவையை வறுத்துக் கொள்ளவும். அடுத்து நெய் விட்டு முந்திரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து பாலை காய்ச்சிக் கொள்ளவும்.
2. அடுத்து சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய்த் தூள், முந்திரி சேர்த்து கிளறவும்.
3. அடுத்து இந்தக் கலவையில் பால் சேர்த்துக் கலந்து லட்டுகளாகப் பிடித்தால் ரவா லட்டு ரெடி.