5 நிமிடத்தில் அட்டகாசமான புதினா சட்னி செய்வது எப்படி?

By TM Desk

Published:

புதினா சட்னி செய்வது மிகவும் எளிமையானது. புதினா இலையில் நிறைய சத்துகள் உள்ளது. நாம் ஆரோக்கியத்தை காக்கும் தன்மை கொண்டது. உடலில் உள்ள தலை சுற்றல், அஜீரண கோளாறுகள், ஆஸ்துமா போன்றவற்றிற்கு பலன் தரக் கூடியது மற்றும் நினைவாற்றல் தரக் கூடியது.

pudina
புதினா

இதனை சட்னி செய்து காலையில் இட்லி, தோசை மற்றும் பிரட் சாண்ட்விச்சுடன் சாப்பிடலாம் மற்றும் சாதத்தில் சேர்த்தும் அல்லது பதார்த்தமாகவும் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

புதினா சட்னி பல வகையில் செய்யலாம். கொத்தமல்லி கட்டு அல்லது தேங்காய் சேர்த்தும் செய்யலாம். இந்த பதிவில் தேங்காய் சேர்த்து புதினா சட்னி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

pudina
புதினா

இதையும் படியுங்கள்: டேஸ்ட்டியான கோதுமை அல்வா ரெசிப்பி!

தேவையான பொருட்கள்:

புதினா – ஒரு கட்டு அல்லது ஒரு கை பிடியளவு
சின்ன வெங்காயம் – 8
பச்சை மிளகாய் – 2
புளி – எலுமிச்சை அளவு
துருவிய தேங்காய் – கால் கப்
உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்

pudina
புதினா

புதினா சட்னி செய்முறை:

நன்கு சுத்தம் செய்து புதினா இலைகளை ஒரு கைப் பிடியளவு எடுத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த பிறகு சின்ன வெங்காயத்தை நிறம் மாறும் அளவிற்கு வதக்கி கொள்ளவும். இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு புதினா இலைகளை அந்த சூட்டில் வதக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் வதக்கிய பொருட்கள், தேங்காய் துருவல், புளி, உப்பு மற்றும் தண்ணீர் தேவைக்கேற்ப சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து அரைத்த விழுதில் சேர்த்து கொள்ளுங்கள்.  அவ்வளவு தான் மிகவும் சுவையான புதினா சட்னி தயார். இதனை உப்புமா, பொங்கல், சாப்பாடு, பிரட் மற்றும் சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள்: இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக்காய் கூட்டு!

Leave a Comment