புரதச் சத்து நிறைந்த பாசிப் பருப்பு சாதம்!!

By Staff

Published:

f88319183b8972eb476b8c084183988e

பாசிப் பருப்பு அதிக அளவில் புரதச் சத்தினைக் கொண்டதாகவே உள்ளது. இந்த பாசிப் பருப்பினைக் கொண்டு சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பாசிப் பருப்பு – 1 கப்

அரிசி – 2 கப்

வெங்காயம் – 2

தக்காளி – 3

காய்ந்த மிளகாய் – 3

நெய்- 2 ஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுந்து – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

1.     வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2.     அரிசி மற்றும் பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

3.     அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பெருங்காயத் தூள், சீரகம், மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

4.     அடுத்து வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

5.     அடுத்து தண்ணீர் ஊற்றி அரிசி மற்றும் பருப்பு போட்டு நெய் ஊற்றி 3 விசில் வைத்து இறக்கி கறிவேப்பிலை தூவவும்.

6.     சுவையான பாசிப் பருப்பு சாதம் ரெடி.

Leave a Comment