சைவப் பிரியர்களுக்கான பட்டாணிக் குருமா!!

By Staff

Published:

bebe4e18fe397b2df03dd8fb450c9e89

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்து வகையான ரெசிப்பிகளுக்கும் பொருந்துகிற குருமாதான் பட்டாணிக் குருமா. இந்த சுவையான பட்டாணிக் குருமாவை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

பச்சை பட்டாணி – 1 கப்

பட்டை – 1 இன்ச்

கிராம்பு – 3

வெங்காயம் – 1

தக்காளி – 1

இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

தேங்காய் பால் – 1/2 கப்

உருளைக்கிழங்கு – 1

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  1. பட்டாணியை 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. குக்கரில் ஊற வைத்த பட்டாணியுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 1 விசில் விட்டு இறக்கவும்.
  3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  4. அடுத்து மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  5. அடுத்து வேக வைத்து உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி, சோம்புத் தூள், தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
  6. அதன்பின்னர் கொதிக்க விட்டு இறக்கினால் பச்சை பட்டாணி குருமா ரெடி.

Leave a Comment