தித்திப்பான பாசிப்பருப்பு பாயாசம் ரெசிப்பி!

By Staff

Published:

ca9f9c4221b2c052d243f5d2bc313984

பாசிப்பருப்பு அதிக அளவு புரதச் சத்தினைக் கொண்டதாக உள்ளது. பாசிப்பருப்பில் குழம்பு, கூட்டு சாப்பிட விரும்பாதவர்களுக்கு பாசிப்பருப்பில் பாயாசம் செய்து கொடுத்து அசத்தலாம். 

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு- 50 மில்லி
தேங்காய்- 4 துண்டு
திராட்சை- 5
 ஏலக்காய்- 5
முந்திரி- 5
பால்- 1 டம்ளர்
வெல்லம்- 50 கிலோ கிராம்

செய்முறை:
1. குக்கரில் பாசிப்பருப்புடன் தண்ணீர்விட்டு மைய வேகவிடவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
2. அடுத்து வெல்லத்தை உடைத்து தண்ணீரில் கரைத்து பாகு போல் காய்ச்சிக் கொள்ளவும். பாலைக் காய்ச்சிக் கொள்ளவும்.
3. அடுத்து வாணலியில் நெய்விட்டு தேங்காய் துருவல், முந்திரி, ஏலக்காய், திராட்சை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
4. அடுத்து பாசிப்பருப்பு கலவை, வெல்லம், மற்றும் நெய்யில் வறுத்த பொருட்களைப் போட்டு காய்ச்சிய பால் ஊற்றி கிளறி இறக்கினால் பாசிப்பருப்பு பாயாசம் ரெடி.

Leave a Comment