டயட் இருப்பவர்களுக்கான ஓட்ஸ் இனிப்பு உருண்டை!!

By Staff

Published:

42909d527fd494c575c84c2b1a340f12-2

டயட் இருப்பவர்கள் அரிசி சாதத்திற்குப் பதிலாக ஓட்ஸினை எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய ஓட்ஸில் இப்போது இனிப்பு உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
ஓட்ஸ்- 1 கப், 
நெய்- 3 ஸ்பூன், 
சர்க்கரை – 1 கப்,
முந்திரி- 5, 
பாதாம்- 5, 
வெள்ளரி விதை – 1 ஸ்பூன்,
ஏலக்காய் தூள்- சிறிதளவு, 

செய்முறை :
1.    வாணலியில் நெய்விட்டு ஓட்ஸைப் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் சர்க்கரையைப் போட்டு பொடித்துக் கொள்ளவும். 
3.    அடுத்து முந்திரி, பாதாம், வெள்ளரி விதையை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். நெய்யை உருக்கிக் கொள்ளவும்.
4.    அடுத்து ஓட்ஸ், முந்திரி, பாதாம், வெள்ளரி விதை, சர்க்கரைத் தூள், ஏலக்காய்த் தூள் சேர்த்து நெய்யை உருக்கி ஊற்றி லேசாக தண்ணீர் தெளித்து உருண்டைகளாகப் பிடித்து ஓட்ஸ் இனிப்பு உருண்டை ரெடி.
 

Leave a Comment