ஓட்ஸ் உடல் எடையினைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது. இத்தகைய ஓட்ஸில் இப்போது கார உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை :
ஓட்ஸ் – 200 மில்லி,
காய்ந்த மிளகாய் – 4,
தேங்காய் – 1 துண்டு,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கடுகு – 1 ஸ்பூன்,
உளுந்து – 1 ஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்,
சீரகம் – 1/2 ஸ்பூன்,
எண்ணெய்- தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
1. ஓட்ஸை வாணலியில் போட்டு வறுத்து மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
3. அடுத்து தேங்காய்த் துருவலை வதக்கி, ஓட்ஸ், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிட்டு இறக்கி ஆறவிட்டு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
4. அதன்பின்னர் இந்த உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவிட்டு இறக்கினால் ஓட்ஸ் கார உருண்டை ரெடி.