இட்லி, தோசைக்கு ஏற்ற மட்டன் குடல் வறுவல்!!

By Staff

Published:

0ddd7e1338bc01027121075189bd1324

இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிடும் வகையிலான குடல் வறுவலினை இப்போது செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
மட்டன் குடல் – 1, 
வெங்காயம் – 2,
காய்ந்த மிளகாய் – 4,
எண்ணெய் – தேவையான அளவு,
கறிவேப்பிலை – கைப்பிடியளவு, 
மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன்,
தனியா தூள்- 1 ஸ்பூன்,
கரம் மசாலா – 1 ஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
இஞ்சி- 1 துண்டு

செய்முறை :
1. குடலை சுத்தம் செய்து மஞ்சள் தூள் கொண்டு அலசவும். அடுத்து அதனை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து குக்கரில் மட்டன் குடல், இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
4. அடுத்து வேகவைத்த குடல், மிளகாய்த் தூள், தனியா தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.
5. இறுதியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் மட்டன் குடல் வறுவல் ரெடி.
 

Leave a Comment