சைவப் பிரியர்களுக்கான காளான் குழம்பு!!

By Staff

Published:

a9b328af5d7db770c8bdd4987fcb7813

சைவப் பிரியர்கள் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடுவது காளானைத் தான். இத்தகைய காளானைக் கொண்டு நாம் இப்போது குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
காளான் – அரை கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
மிளகாய்த் தூள் – 1/4 ஸ்பூன்
தனியாத் தூள் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
பட்டை- 3
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
தேங்காய் – கால் மூடி
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை- தேவையான அளவு, 
கொத்தமல்லி இலை- தேவையான அளவு

செய்முறை :

1. வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். காளானை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
3. அடுத்து காளானைப் போட்டு வதக்கி மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
4. அடுத்து மிக்சியில் தேங்காய் மற்றும் சோம்பினைப் போட்டு அரைத்து குழம்பில் ஊற்றி கொதிக்கவிடவும்.
5. அடுத்து குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்துவரும்போது கொத்துமல்லி இலை தூவி இறக்கினால் காளான் குழம்பு ரெடி.

 

Leave a Comment