மகாலட்சுமி பூஜைக்கு நைவேத்தியமாய் சேமியா கேசரி …

By Staff

Published:

மாலை வேளையில் எதாவதொரு இனிப்பினை வைத்து மகாலட்சுமிக்கு படைப்பது வழக்கம். பாயாசம், கேசரி, சர்க்கரை பொங்கல், சுண்டல் வகைகள் என மகாலட்சுமிக்கு படைப்பது வழக்கம். கேசரியில் பல வகை உண்டு. அதில் ஒன்றுதான் சேமியா கேசரி. இதை சுலபாகவும், விரைவாகவும் செய்யலாம்.

c2f88039ca588c78d41bbb08fa4c8a38

தேவையான பொருட்கள்:
சேமியா – 1 கப்

தண்ணீர் – 1 1/2 கப்

சர்க்கரை – 1/2 கப்

நெய் – 3 டீஸ்பூன்

ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை

குங்குமப்பூ – 1 சிட்டிகை

கேசரி பவுடர் – 1 சிட்டிகை

முந்திரி – சிறிது

திராட்சை -சிறிது

500ba2f9ee480cea9772df5f0ca3a090

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பின் அதே வாணலியில் மீண்டும் 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், சேமியாவை சேர்த்து, நீர் வற்றி சேமியா நன்கு வெந்ததும், அதில் சர்க்கரை சேர்த்து கிளறி, குங்குமப்பூ மற்றும் கேசரிப் பவுடர் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும். மேலும் அதில் நெய் ஊற்றி, தண்ணீர் வற்றும்வரை கிளறி, ஏலக்காய் பொடி மற்றும் முந்திரி சேர்த்து பிரட்டி இறக்கினால், சேமியா கேசரி ரெடி!!!

மாலை வேளையில் மகாலட்சுமி படத்தின்முன் விளக்கேற்றி, நைவேத்தியமாய் சேமியா கேசரியை படைத்து கற்பூர ஆரத்தி காட்டி கேசரியை தானம் செய்ய மகாலட்சுமி அருள் கிட்டும்.

Leave a Comment