கோடை காலத்திற்கேற்ற குளு குளு தர்பூசணி ஜூஸ்!!

By Staff

Published:

604f73c3e24f8d716578410e642de106

தர்பூசணி கோடை காலத்தில் அனைவராலும் விரும்பிச் சாப்பிடும் பழ வகையாகும். இந்த தர்பூசணியில் இப்போது நாம் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையானவை: 
தர்பூசணி பழம்– 1/2 
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன் 
சர்க்கரை – தேவையான அளவு 
ஐஸ் கட்டிகள் – 3

செய்முறை: 
1.    தர்பூசணியின் தோலை சீவிக் கொள்ளவும், அடுத்து அதனை துண்டுகளாக்கி விதைகளை நீக்கவும்.
2.    இதனை மிக்ஸியில் போட்டு சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து குழைய அரைக்கவும். 
3.    அடுத்து இதனை டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டிகளைப் போட்டு குடித்தால் தர்பூசணி ஜூஸ் ரெடி.

Leave a Comment