சைவப் பிரியர்களுக்கான கோவைக்காய் பிரியாணி!

By Staff

Published:

974446f8f879e316683c02be9c2c9f54

தேவையானவை:
பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ
கோவைக்காய் – கால் கிலோ 
வெங்காயம் – 4 
தக்காளி – 3
இஞ்சி- பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன் 
பச்சை மிளகாய் – 5 
பட்டை- 4
பிரியாணி இலை – 5 
கிராம்பு- 5,
ஏலக்காய் – 5 
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன் 
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் 
மல்லித் தூள் – 1 ஸ்பூன் 
நெய் – 150 மில்லி அளவு 
எலுமிச்சை பழம் – 1 
கொத்தமல்லி தழை- கைப்பிடியளவு 
புதினா – கைப்பிடியளவு
எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை:
1.    வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். கோவைக்காயை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் போட்டு தாளித்து அத்துடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.
3.    அடுத்து கொத்தமல்லி, புதினா இலை, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் போட்டு வதக்கவும்.
4.    அடுத்து கோவைக்காய், உப்பு சேர்த்து வேகவிட்டு, அரிசியைப் போட்டு அதனைவிட இரண்டு மடங்கு தண்ணீர்விட்டு வேக விடவும். 
5.    அடுத்து விசில் வரும்போது எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு இறக்கினால் கோவைக்காய் பிரியாணி ரெடி.

Leave a Comment