குழந்தைகளுக்குப் பிடித்தமான வால்நட் பிரவுனி!!

By Staff

Published:

e265c721d3591506e7f47d1a8a40e682

வால்நட் பிரவுனி மிகவும் சுவையானதாக இருக்கும். அந்த வால்நட் பிரவுனியை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

பால் – 500 மிலி

மைதா மாவு – 750 கிராம்

பேக்கிங் பவுடர் – 10 கிராம்

பேக்கிங் சோடா – 10 கிராம்

வால்நட் – 220 கிராம்

சாக்லேட் – 360 கிராம்

வெண்ணெய் – 360 கிராம்

சர்க்கரை – 260 கிராம்

பிரவுன் சுகர் – 260 கிராம்

செய்முறை

1. வெண்ணெய், சர்க்கரை, பால் ஆகியவற்றை கலந்து 10 நிமிடங்கள் ஊறவிடவும்.

2. அடுத்து ஒரு பாத்திரத்தில் சாக்லேட்டை உருக்கி மேற்கண்ட கலவையில் கலந்து கொள்ளவும்.

3. அடுத்து மைதா மாவு, வால்நட், பேக்கிங் சோடா ஆகியவற்றைக் கலந்து கொள்ளவும்.

4. அடுத்து ஒரு தட்டில் நெய் தடவி ஊற்றி அதில் அந்தக் கலவையினை ஊற்றிக் கொள்ளவும்.

4. அடுத்து தட்டினை மைக்ரோ ஓவனில் வைத்து வேகவிட்டு எடுத்தால் டேஸ்ட்டியான வால்நட் பிரவுனி ரெடி.

Leave a Comment