மாலை வேளைகளில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையிலான ஒரு ரெசிப்பியைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். அதாவது சோயாவில் இப்போது 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சோயா – 100 கிராம்
இஞ்சி- 1 துண்டு
பூண்டு- 1
சிக்கன் 65 மசாலா – 3 டீஸ்பூன்
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்
கான்பிளவர் மாவு – 1 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. சோயாவினை வெந்நீரில் போட்டு ஊறவிட்டு, பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் சோயா, தயிர், சிக்கன் 65 மசாலா, கான்பிளவர் மாவு, மைதா மாவு, இஞ்சி- பூண்டு ஃபேஸ்ட், உப்பு நன்கு கலந்து ஊறவைத்துக் கொள்ளவும்..
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சோயாவினைப் போட்டு பொரித்து எடுத்தால் சோயா 65 ரெடி.