குழந்தைகளுக்குப் பிடித்தமான ஆலு பரோட்டா!!

By Staff

Published:

b2706a5f751800c20253fd23fc21b438-2

பரோட்டா என்றாலே குழந்தைகள் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடுவர். அந்தவகையில் இப்போது ஆலு பரோட்டாவை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 5
மைதா மாவு – 200 கிராம்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 3 ஸ்பூன்
சோம்பு – ½ ஸ்பூன்
மல்லித் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்
கரம்மசாலா தூள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள்தூள் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
1.    பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 1 மணி நேரம் ஊற விடவும். சீரகம் மற்றும் சோம்பினை நன்கு பொடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து குக்கரில் உருளைக் கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு 2 விசில்விட்டு வேகவிட்டு இறக்கவும்.
3.    அடுத்து உருளைக் கிழங்கின் தோலை உரித்து நன்கு மசிக்கவும்.
4.    அடுத்து உருளைக்கிழங்கில் சீரகத்தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள், கொத்தமல்லி தூள், கரம்மசாலா தூள், சோம்புத்தூள், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
5.    வாணலியில் எண்ணெய் ஊற்றி மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வேகவிட்டு ஆறவிடவும். 
6.    அடுத்து மைதா மாவை பிசைந்து உருண்டைகளாக உருட்டி சப்பாத்திப் போல் தேய்த்து அதன் நடுவே உருளை மசாலாவை வைத்து தேய்த்து தோசைக் கல்லில் போட்டு வேகவிட்டு எடுத்தால் ஆலு பரோட்டா ரெடி. 
 

Leave a Comment