ஐயர்வீட்டு மாங்காய் சாம்பார் ரெசிப்பி!!

By Staff

Published:

31ecc9490e8437f766d628bd5176a2c7

மாங்காயில் இன்று நாம் சுவையான சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். அதுவும் ஐயர்வீட்டு ஸ்டைலில் சமைத்துக் கொடுத்து அசத்தலாம் வாங்க.

தேவையானவை: 
மாங்காய் – 1 
துவரம் பருப்பு – 3/4 கப் 
சின்ன வெங்காயம் – 10 
தக்காளி – 1 
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கடுகு- ½ ஸ்பூன்
சாம்பார் தூள் – 2 ஸ்பூன் 
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் 
உளுந்து – 1/2 டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் – 2 
பெருங்காயத் தூள் – 1 ஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு 
நல்லெண்ணெய் – தேவையான அளவு 
கறிவேப்பிலை – தேவையான அளவு 

செய்முறை: 
1.    மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து குக்கரில் துவரம் பருப்புடன் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 விசில் விட்டு இறக்கி மத்தால் மசிக்கவும்.
3.    அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், உளுந்து போட்டு தாளிக்கவும்.
4.    அடுத்து வெங்காயம், தக்காளி, மாங்காயைப் போட்டு நன்கு வதக்கி, அத்துடன் பருப்பு, மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு சேர்த்து 1 விசில் விடவும்.
5.    அடுத்து வாணலியில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து அத்துடன் மசித்த பருப்பினைச் சேர்க்கவும்.
6.    இந்தக் கலவையை குக்கரில் கொட்டி இறக்கினால் மாங்காய் சாம்பார் ரெடி.
 

Leave a Comment