இனி தக்காளி சாஸை கடையில் வாங்காதீங்க!

By Staff

Published:

c28cb88581f17335567a58e3919b8036

தக்காளி சாசினை சைனீஸ் உணவுகள், பீசா செய்யவும், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ்களுக்கு தொட்டுக்கவும் பயன்படுது. சில பிள்ளைக அப்படியே சாப்பிடுவேன்னு தக்காளி சாசினை கைகளில் ஊத்தி சாப்பிடும். தக்காளி சாஸ் கொஞ்சம் விலை அதிகம்தான். எல்லாத்துலயும் கலப்படம் நடக்கும் காலக்கட்டம் இது. தக்காளி சாசினை இராசயான கலப்பு எதும் இல்லாம வீட்டிலேயும் செய்யலாம்., அது எப்படின்னு பார்க்கலாம் வாங்க!

தேவையான பொருட்கள்..

தக்காளி – ஒரு கிலோ
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – அரை டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 3 பல்
பட்டை – சிறிதளவு
கிராம்பு – சிறிதளவு
எலுமிச்சைப்பழச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்.

ec070c9c62c9c971d226b1f7cd2b75bb

செய்முறை..

தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதுக்கு நாட்டு தக்காளியைவிட பெங்களூர் தக்காளியே சிறந்தது. நாட்டுத்தக்காளியில் சாறு அதிகமா இருக்கும்.

பூண்டு, இஞ்சியைத் தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். 

குக்கரில் தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் சத்தம் வரை வேக விடவும். 

வெந்தவுடன் குக்கரை திறந்து தக்காளியை ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும். 

இதை ஒரு பெரிய கண் உள்ள வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தக்காளி விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீதமுள்ள சர்க்கரையைச் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கைவிடாமல் கிளறவும். 

சாஸை ஒரு தட்டில் சிறிது ஊற்றினால், அது ஒட்டாமல் கெட்டியாக இருக்க வேண்டும். அதாவது, நீர்க்க இருக்கக் கூடாது. இதுவே பதம், இந்த பதம் வந்தவுடன் பிறகு அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கி ஆறியவுடன் சுத்தமான பாட்டிலில் ஊற்றி மூடி வைக்கவும். 

இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.  இதில் வினிகர் , ஃபுட் கலர் மாதிரியான செயற்கை ரசாயண பொருட்கள் ஏதுமில்லை. அதனால் தைரியமா சிறுகுழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

Leave a Comment