தினத்துக்கும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடிச்சு போச்சுன்னு உங்க வீட்டு குழந்தைங்க அடம்பிடிக்குதா?! அப்ப இந்த ரவா பொங்கலை சட்டுன்னு செய்து கொடுத்து அசத்துங்க! உப்புமா பிடிக்காதவங்களுக்குக்கூட இந்த பொங்கலை பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
ரவை – 1 கப்
பாசிப் பருப்பு – 1/4 கப்
தண்ணீர் – 3.5 கப்
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
நெய் – 2 தேக்கரண்டி
முந்திரி – 10
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
இஞ்சி – ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1
பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை: கடாயில் நெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி ரவை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி பாசிப் பருப்பு சேர்த்து ஒரு நிமிடம் குறைந்த வெப்பத்தில் வறுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வேக விடவும். பருப்பு வெந்தபின் வறுத்து வைத்த ரவை சேர்த்து அத்துடன் உப்பு போட்டு வேக விடவும். ஒரு கடாயில் நெய் சேர்க்கவும். பின் முந்திரி, மிளகு, சீரகம் சேர்த்து சிறிது நிமிடங்கள் அவற்றை வறுத்து கறிவேப்பிலை மற்றும் மிளகாய், இஞ்சி, பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறினால் சுவையான ரவா பொங்கல் தயார்.