தீபாவளிக்கு குட்டீஸ்க்குப் பிடிச்ச தித்திப்பான அதிரசம் செய்வது எப்படி?

By Sankar Velu

Published:

தீபாவளி பலகாரங்களில் முக்கியமான இடத்தைப் பிடிப்பது அதிரசம் தான். ரொம்பவே சுவையான இனிப்பு என்றால் அது இதுதான். இதை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

Raw rice
Raw rice

பச்சரிசி – 400 கிராம்
அச்சுவெல்லம் – 300 கிராம்
ஏலக்காய் – சிறிது
சுக்குப்பொடி – கால் டீஸ்பூன்
நெய் – ஒரு ஸ்பூன்எண்ணை, தண்ணீர் – தேவைக்கு

எப்படி செய்வது?

முதலில் அதிரசத்துக்கான பதமான மாவு தயார்செய்ய வேண்டும். இந்த மாவின் தன்மையைப் பொருத்துத் தான் அதிரசத்தின் ருசி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிரசம் மாவு தயாரிக்கும் முறை

பச்சரிசியில் குண்டா இருக்குற பச்சரிசியைத் தான் வாங்க வேண்டும். அப்போது தான் அதிரசம் செய்யும்போது மாவு பிரியாமல் பதமாக வரும். ஒரு கிலோ பச்சரிசிக்கு முக்கால் கிலோ வெல்லம்.

400 கிராம் பச்சரிசியை ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே தண்ணீரில் அலசி சுத்தம் பண்ணி ஊற வைங்க. இதை ஒரு துணியில் விரித்து காய விடுங்க. 20 நிமிஷம் மின்விசிறியின் கீழ் காய விடுங்க. இதோட பதம் என்னன்னா அதை அள்ளிப் பார்க்கும் போது கைகளில் தண்ணீர் ஒட்டக்கூடாது.

pacharisi 1
Raw rice in Jar

இப்போ அதை எடுத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு பவுடராக்குங்க. அப்போது அதனுடன் 4 ஏலக்காயையும் வாசனைக்காக சேர்த்துக் கொள்ளுங்க.

பவுடராக அரைத்ததும் ஒரு ஜல்லடையைக் கொண்டு நல்லா அரிச்சிடுங்க. நமக்கு நல்ல நைசான மாவு தான் தேவை. 400 கிராம் அரிசிக்கு 300 கிராம் வெல்லம் சரியான அளவு.

நாம எந்தக் கப்பால 2 கப் அரிசி அளந்தோமோ அதே கப்பால ஒன்றரை கப் வெல்லம் அளந்து எடுத்துக்கலாம்.

இப்போ நாம சர்க்கரைப்பாகு செய்யணும். ஒரு வாணலியில் வெல்லத்தைப் போட்டு அதனுடன் அரைகப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்க. இப்போ அதை இன்னொரு வாணலியை எடுத்து அதில் வடிகட்டுங்க.

Sarkarai pagu and Raw rice flour
Sarkarai pagu and Raw rice flour

பாகு ரெடியாச்சுன்னா தண்ணீரில் கரையாமல் கையில எடுக்கும்படியாக வர வேண்டும். ஒரு டேபிள் ஸ்பூன் நெய், கால் டீஸ்பூன் சுக்குப்பொடி போட்டு சர்க்கரைப்பாகுவில் கலக்குங்க. அப்புறம் அரிசிமாவை ஒவ்வொரு கரண்டியாக போட்டு கலந்து கொண்டே இருங்க. ரொம்பவும் தண்ணியாகவும் இருக்கக்கூடாது.

ரொம்பவும் திக்காககவும் இருக்கக்கூடாது. இப்போ அதன் மேல கொஞ்சமா நெய் ஊற்றி பிரிட்ஜ்ல வைச்சி மறுநாள் அல்லது அதற்கு மறுநாள் அதிரசத்தை செய்து சாப்பிடலாம்.

அதிரசம் ரெடி..!

ஒரு உருண்டை எடுத்து அதை உருட்டி பிளாஸ்டிக் சீட்டில் தட்டி எடுத்து அதன் நடுவில் ஒரு ஓட்டை போடவேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி கொதிக்க விடுங்க. ஒவ்வொரு அதிரசத்தையா அதில் போட்டு பொரித்து எடுங்க. அதை உடைச்சிப் பார்த்தா நல்லா வெந்துருக்கும். இது சூடாவும் சுவையாகவும் இருக்கும். இந்த தீபாவளிக்கு உங்க வீட்ல எல்லாருக்கும் செய்து கொடுத்து அசத்துங்க.

 

Leave a Comment