மட்டன் கீமாவில் பொதுவாக வறுவல் அல்லது கிரேவி ரெசிப்பிகளைத் தான் வீட்டில் சமைப்போம். ஆனால் கீமாவில் பிரியாணி என்றால் பொதுவாக நாம் ஹோட்டல்களில்தான் வாங்கிச் சாப்பிடுவோம்.
தேவையானவை:
மட்டன் கீமா- அரை கிலோ
பாசுமதி அரிசி – 500 கிராம்
வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
பிரியாணி இலை – 2
பட்டை- 2,
கிராம்பு- 2 ,
ஏலக்காய்-2,
ஜாதிக்காய்-2,
அன்னாசி பூ – 2
பிரியாணி மசாலா – 1 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
கொத்தமல்லி இலைகள்- கைப்பிடியளவு
புதினா இலைகள்- கைப்பிடியளவு
செய்முறை:
1.மட்டன் கீமாவை சுத்தம் செய்து மஞ்சள் தூள் கொண்டு கழுவிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
2.அடுத்து குக்கரில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ சேர்த்து வதக்கவும். இஞ்சி மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும். அடுத்து மட்டன் கீமா, புதினா இலை, கொத்தமல்லி இலை பிரியாணி மசாலா போட்டு வதக்கவும்.
4. அதன்பின்னர் அரிசியைப் போட்டு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி 1 விசில் விட்டு இறக்கினால் மட்டன் கீமா பிரியாணி ரெடி.