கோவாவில் உள்ள ஹோட்டல்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் க்ரீன் சிக்கன் குழம்பினைத் தான் நாம் இப்போது செய்வது எப்படி என்று பார்க்கப்போகிறோம்.
தேவையானவை:
சிக்கன் – 1 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 ஸ்பூன்
தேங்காய் – கால் மூடி
பச்சை மிளகாய் – 2
புதினா – ½ கட்டு
கொத்தமல்லி இலை- ½ கட்டு
சீரகத் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 ஸ்பூன்
பட்டை – 3
ஏலக்காய் – 2
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. மிக்ஸியில் தேங்காய், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
3. அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைத்து வைத்துள்ள மசாலா, சீரகத் தூள், மிளகுத் தூள், சிக்கன், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரை 2 விசில் விட்டு இறக்கவும்.
4. இறுதியாக கறிவேப்பிலை தூவி இறக்கினால் கோவா க்ரீன் சிக்கன் குழம்பு ரெடி.