ஹோட்டல் ஸ்டைல் நண்டு கிரேவி!!

By Staff

Published:

f1fc0607f8c65c351f703d32ee44d105-2

என்னதான் வீட்டில் சமைத்து சாப்பிட்டாலும், ஹோட்டலில் சாப்பிடுவதுபோல் வராது, இன்று நாம் ஹோட்டல் ஸ்டைலில் டேஸ்ட்டியான நண்டு சில்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

நண்டு – 1/2 கிலோ

பூண்டு – 10 பல்

தக்காளி – 2

சர்க்கரை – 1 ஸ்பூன்

சோளமாவு – 2 ஸ்பூன்

எண்ணெய் – 2 ஸ்பூன்

மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன்

வினிகர் – 1 ஸ்பூன்

முட்டை – 1

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

1.         கொத்தமல்லி, பூண்டு, தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

2.         அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி 3 பல் பூண்டு சேர்த்து தாளித்து, நண்டு மற்றும் அதனுடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

3.         அடுத்து அதனுடன் தக்காளி விழுது, சர்க்கரை, வினிகர், உப்பு சேர்த்து கலக்கவும்.

4.         3 நிமிடங்கள் கழித்து சோளமாவுடன் தண்ணீர் கலந்து சேர்க்கவும்.

5.         அடுத்து ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதையும் கலவையில் சேர்த்து கொத்தமல்லித் தழையைத் தூவினால் நண்டு கிரேவி ரெடி.

Leave a Comment