சீஸ் என்றாலே நிச்சயம் குழந்தைகள் அதனை விரும்பி வாங்கிச் சாப்பிடுவர். இத்தகைய சீஸினைக் கொண்டு ஹோட்டல் ஸ்டைலில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி- 1
பச்சை மிளகாய் – 2
சீஸ் – 1கப் (துருவியது)
கொத்தமல்லி – தேவையான அளவு
செய்முறை :
1. கொத்தமல்லி, தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து தோசைக் கல்லில் மாவை ஊற்றி தோசைமீது வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லியைத் தூவி வேகவிட்டு இறக்கினால் சீஸ் தோசை ரெடி.