கொள்ளு உடல் எடையினைக் குறைக்கும் என்பது நாம் அறிந்ததே, அத்தகைய கொள்ளில் சட்னி, குழம்பு, ரசம் போன்றவற்றினை செய்து சாப்பிடலாம். ஆனால் இவற்றில் கொள்ளு ரசம்தான் உடல் எடையினை விறுவிறுவென குறையச் செய்யும். அத்தகைய கொள்ளு ரசத்தினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
கொள்ளு – கால் கப்,
தக்காளி – 2,
மிளகு- 2 ஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
மிளகாய் – 3,
பூண்டு – 6,
நெய் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்,
கடுகு – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
புளி – தேவையான அளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
1. தக்காளியினை நறுக்கிக் கொள்ளவும், அடுத்து புளியை ஊறவைத்துக் கொள்ளவும். அதேபோல் கொள்ளினை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. அடுத்து கொள்ளினை அலசி, குக்கரில் ஒரு விசில் விட்டு வேகவிட்டு மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து வாணலியில் நெய் ஊற்றி கடுகு, மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
4. தாளித்த பின்னர் தக்காளியைப் போட்டு வதக்கி, மஞ்சள் தூள், உப்பு, புளிக் கரைசல், அரைத்த கொள்ளு, மிளகாய் சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
5. இப்போது கொள்ளு ரசம் ரெடி.