தேவையானவை:
பட்டை- 4
சீரகம்- 1 ஸ்பூன்
மிளகு- 8
பிரிஞ்சி இலை- 2
லவங்கம்- 6
ஏலக்காய்- 6
செய்முறை:
1. வாணலியில் எண்ணெய்விடாமல் பட்டை, சீரகம், மிளகு, பிரிஞ்சி இலை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
2. அடுத்து இதனை ஆறவிட்டு மிக்சியில் போட்டு பொடித்தால் கரம் மசாலா பொடி ரெடி.
இந்த மசாலா பொடியினை டப்பாவில் போட்டு மூடிவைத்து பயன்படுத்திக் கொள்ளவும்.