கஞ்சி வகைகளில் அரிசி கஞ்சி, கேழ்வரகு கஞ்சி, கம்பு கஞ்சி எனப் பல வகைகளை நாம் பார்த்திருக்கிறோம், அந்த வகையில் இப்போது உளுந்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உளுந்து – 1 கப்
தேங்காய் துருவல் – தேவையான அளவு
நாட்டுச் சர்க்கரை – அரை கப்
சுக்கு – 1 ஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்
செய்முறை :
1. உளுந்தை லேசாக வறுத்து ஆறவைக்கவும்.
2. அடுத்து ஆறவைத்த உளுந்தினை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
3. பொடித்த உளுந்த மாவுடன் 1 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் கைவிடாமல் கிளறி வேகவிடவும்.
3. அடுத்து நாட்டுச் சர்க்கரை, சுக்கு, ஏலக்காய் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிடவும்.
4. இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால் உளுந்து கஞ்சி ரெடி.