ஆரோக்கியமான வெந்தயக் கீரை சாதம் ரெசிப்பி!!

By Staff

Published:

aabbaba36dd1dbda45e47eae6b358feb

பொதுவாக கலவை சாதம் என்றாலே புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் போன்ற சாதங்களையே நாம் செய்து சாப்பிடுவோம். அந்தவகையில் இப்போது நாம் வெந்தயக்கீரையில் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
வெந்தயக் கீரை- 1 கட்டு
கடுகு- 1 ஸ்பூன்
உளுந்து- 1 ஸ்பூன்
கடலைப் பருப்பு- 2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
புளி- நெல்லிக்காய் அளவு
பெருங்காயத் தூள்- கால் ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை : 
1.    வெந்தயக் கீரையை கழுவி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊறவிடவும்.
2.    அடுத்து வாணலியில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டு தாளிக்கவும்.
3.    அடுத்து வெந்தயக்கீரையினைப் போட்டு மஞ்சள் தூள்,  மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
4.    அடுத்து  புளிக் கரைசலை ஊற்றி எண்ணெய் பிரிந்துவர வேகவிட்டு இறக்கி சாதம் போட்டுக் கிளறினால் வெந்தயக்கீரை சாதம் ரெடி.
 

Leave a Comment