ஆரோக்கியமான வாழைப்பூ வடை!!

By Staff

Published:

85d8f0f85c1246af80beed3c49b509d9-2

வாழைப்பூ அதிக அளவில் நார்ச் சத்துகளைக் கொண்டதாக உள்ளது. இத்தகைய வாழைப்பூவில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
வாழைப்பூ – 1
பச்சை மிளகாய் – 2
கடலைப்பருப்பு – 100 மில்லி கிராம்
பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
1.    கடலைப்பருப்பை 4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையினை நன்கு நறுக்கிக் கொள்ளவும்.
2.    வாழைப்பூவை சுடுதண்ணீரில் போட்டு ஊறவைத்து அலசிக் கொள்ளவும். அடுத்து வாழைப்பூவை நறுக்கிக் கொள்ளவும், வெங்காயத்தினை நறுக்கிக் கொள்ளவும்.
3.    கிரைண்டரில் கடலைப்பருப்பினை தண்ணீர்விட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
4.    அடுத்து பாத்திரத்தில் காய்ந்த மிளகாய், இஞ்சி, சோம்பு, பெருங்காயத்தூள், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
5.    இதனை வடையாகத் தட்டிப் போட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் வாழைப்பூ வடை ரெடி.

Leave a Comment