வாழைப் பூ துவர்ப்பு தன்மை கொண்டது, இதனைப் பொரியலாக சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் வடையாகச் சாப்பிடலாம்.
தேவையானப்பொருட்கள்:
வாழைப்பூ – 1
கடலைப்பருப்பு – 1 கப்
காய்ந்தமிளகாய் – 2
பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு
செய்முறை:
1. கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. அடுத்து வாழைப்பூவை தண்ணீரில் போட்டு லேசாக சூடு பண்ணி அலசிக் கொள்ளவும்.
4. அடுத்து ஊறவைத்துள்ள பருப்பை அலசி அத்துடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, சோம்பு, பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
5. மேலும் கடைசியில் வாழைப்பூவை நறுக்கி மாவுடன் கலக்கவும்.
6. அடுத்து வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வடையாகத் தட்டி எண்ணெயில் பொரித்தால் வாழைப்பூ வடை ரெடி.