தலைமுடி அடர்த்தியினை அதிகரிக்கச் செய்யும் நெல்லிக்காய் டீ!!

By Staff

Published:

82e7332b00046ad5b000ccd8e8317adf

தலைமுடி அடர்த்தியினை அதிகரிக்கச் செய்ய நினைப்போர் நெல்லிக்காயினை தினமும் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும், அந்த நெல்லிக்காயில் டீயினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.  

தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 10
இஞ்சி – 1 
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்

செய்முறை :
1. நெல்லிக்காயினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். அடுத்து இதனை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நெல்லிக்காய்ப் பொடியினைப் போட்டு கொதிக்க விடவும்.
4. அடுத்து இஞ்சி, தேன், எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கிக் குடித்தால் நெல்லிக்காய் டீ ரெடி.

இதனைத் தொடர்ந்து குடித்தால் தலைமுடி அடர்த்தி அதிகமாகும்.

 

Leave a Comment