கோதுமை மாவில் சப்பாத்தி மட்டும் இல்ல இனி குளோப் ஜாமுனும் செய்யலாம் தெரியுமா..?

By Velmurugan

Published:

கோதுமை மாவில் குளோப் ஜாமுன் செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 1 கப் சலித்து கொள்ளவும்
பால் பவுடர் – 4 ஸ்பூன்
பால் – 1/4 டம்ளர்
சர்க்கரை – 1 டம்ளர்
ஏலக்காய் – 3
ஆரஞ்ச் கலர் – 1 சிட்டிகை
பேக்கிங் சோடா – 1/2 டிஸ்பூன்
நெய் – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – 1/4 லிட்டர்.

ஹோட்டல் ஸ்டைல் வெஜ் புலாவ் வீட்டிலே செய்வது எப்படி…?

ஒரு கடாயில் சிறிது நெய் சேர்த்து சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து கொள்ளவும்.பிறகு மீண்டும் சிறிது நெய் சேர்த்து கோதுமை மாவின் பச்சை வாடை செல்லும் வரை வறுத்து கொள்ளவும்.

நன்கு வறுத்த பின், ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆற விடவும்.மாவு நன்றாக ஆறிய பின் பால்,பால் பவுடர்,பேக்கிங் சோடா மற்றும் நெய் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

அப்படி பிசைந்த மாவினை 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும் .10 நிமிடங்கள் ஆனவுடன் மாவினை சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும் .எண்ணெய் நன்றாக காய்ந்த உடன் தீயை சிம்மில் வைத்து, பிடித்து வைத்துள்ள மாவு உருண்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெயில் போட்டு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

இப்போது வறுத்து வைத்துள்ள ஜாமூன்களை சர்க்கரை பாகில் சேர்த்து, நன்கு மிக்ஸ் செய்து 5 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பின் சுவைத்தால் இனிப்பான கோதுமை மாவு குலோப் ஜாமூன் ரெடி.

Leave a Comment