ப்ரக்கோலி அதிக அளவில் நார்ச்சத்துகளைக் கொண்டதாக இருப்பதால் செரிமான சக்தியினை மேம்படுத்துகின்றது. மேலும் இது கொழுப்பினைக் குறைப்பதால் உடல் எடையினை வெகுவாகக் குறைக்க முடியும்.
தேவையானவை:
ப்ரக்கோலி – 1
பூண்டு – 1
நெய் – 2 ஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி- 1
பட்டை – 1 துண்டு
மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
சீரகத் தூள்- ½ ஸ்பூன்
கொத்தமல்லி இலை– தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு,
செய்முறை :
1. ப்ரக்கோலி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் ப்ரக்கோலியினைப் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வெங்காயம், தக்காளி, பூண்டு, கொத்தமல்லியை நறுக்கி கொள்ளவும்.
2. வாணலியில் நெய் விட்டு பட்டை போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் கொத்தமல்லி இலை, ப்ரக்கோலி, உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.
3. அடுத்து மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் ப்ரக்கோலி சூப் ரெடி.