வாழைப்பூ பொரியலானது அதிக அளவில் நார்ச்சத்துகளைக் கொண்டதாக உள்ளது. அத்தகைய வாழைப்பூவில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
வாழைப்பூ – ஒரு கப்
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
உளுந்து – 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கடலைப் பருப்பு – 1/2 ஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
பெருங்காயத் தூள் – ¼ ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – கைப்பிடியளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. வாழைப்பூவை சுத்தம் செய்து அதனை ஒன்றிரண்டாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து வாழைப்பூவுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
3. அடுத்து வாழைப்பூ,வைப் போட்டு உப்பு சேர்த்து மூடி போட்டு தண்ணீர்விட்டு 10 நிமிடங்கள் வேகவிடவும். அடுத்து இதில் தேங்காய் துருவல் கிளறி இறக்கினால் வாழைப்பூ பொரியல் ரெடி.