எந்தெந்த கிழமைகளில் என்னென்ன உணவுகளை சாப்பிடனும்?!

By Staff

Published:

c9af78f21388e35f813fd21d01cd14eb

தலைப்பை பார்க்கும்போதே என்னம்மா இதெல்லாம் ஒரு பதிவாம்மா?! என்னம்மா! நீங்க இப்படி பண்றீங்களேம்மான்னு அலுத்துக்க தோணும். நாம் தினமும் சாப்பிடுவது இயல்பான ஒன்றுதான். ஆனா, சத்தான, சமச்சீரான உணவும் சாப்பிடுகிறோமா என்றால் இல்லை என்ற பதிலே வரும். அதனால்தான் எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது?ன்னு நம்ம முன்னோர்கள் நியதி வகுத்துள்ளனர். இப்படி சாப்பிடுவதால் சமச்சீரான, சத்தான உணவு கிடைத்துவிடும்.

7d07ca8ca6d5fa746a61527afaba8c07-2

1. ஞாயிறு — சூரியன்
கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம்,
சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா,
மாதுளை ஜூஸ், கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார்.

2. திங்கள் — சந்திரன்
பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி,மோர்.
பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல், புட்டு, இடியாப்பாம்.இட்லி.
தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.

78b5537e61e52f61171f175f1b2de26a

3. செவ்வாய் — செவ்வாய்
துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை,
பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம்,தர்பூசணி ஜூஸ்,
தேன் கலந்த செவ்வாழை ,ஆப்பிள்,ஆரஞ்சு பழக்கலவை.மிளகாய் துவயல்.

4. புதன் — புதன்
கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம்,
பாவக்காய் தொக்கு, முருங்கைக் காய் சூப்,
பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி,
வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.

5. வியாழன் — குரு
சுக்கு காபி,அல்லது கஷாயாம், கார்ன் சூப்,
கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை,
தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல்,
சாத்துக்குடி, மாம்பழஜூஸ்,,பொங்கல்,
கதம்பதயிர் , எலுமிச்சை சாதம்,
மாதுளை, முந்திரி,திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம்.

6. வெள்ளி — சுக்கிரன்
பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா,
தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட்,
முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ்,
இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை,
ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ் ,
கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டுபொரியல்,
நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட்.

7. சனி — சனி
ஜிலேபி,எள் உருண்டை, அதிரசம்,
சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல்,
எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம்,
மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம்,
புளியோதரை, எண்ணை கத்தரிக்காய் குழம்பு,
நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ்,
பாதாம், முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை.

இப்படி ஒவ்வொரு கிரகத்துக்கு ஏற்ற உணவினை வகைப்படுத்தப்பட்டுள்ள உணவினை கவனித்தால் அந்த உணவு செய்ய பயன்படுத்தப்பட்ட தானியங்கள் எல்லாமே அந்ததந்த கிரகங்களுக்கு உரியே தானியங்களாகவே இருக்கும். உணவில்கூட கட்டுப்பாட்டையும், இறை நம்பிக்கையும் கலந்து ஆரோக்கியமா வாந்தனர் நம் முன்னோர்கள்.

Leave a Comment