குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் முட்டை பேஜோ!!

தேவையானவை: முட்டை- 3 வெங்காயம் – 2 பூண்டு – 1 காய்ந்த மிளகாய்- 3 உப்பு – தேவையான அளவு எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன் புளி – சிறிதளவு கொத்தமல்லி இலை-…

832f58422874b94f5620c315782db044-2

தேவையானவை:
முட்டை- 3
வெங்காயம் – 2
பூண்டு – 1
காய்ந்த மிளகாய்- 3
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
புளி – சிறிதளவு
கொத்தமல்லி இலை- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை 
1.    முட்டையினை வேகவைத்து தோல் உரித்துக் கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி இலை, பூண்டினை நறுக்கிக் கொள்ளவும். தண்ணீரில் புளியையும், உப்பையும் போட்டு தனித்தனியாக ஊறவிடவும்.
2.    காய்ந்த மிளகாயினை வாணலியில் எண்ணெய்விட்டு வதக்கி மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, அரைத்த காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.
4.    அடுத்து முட்டையின் நடுவில் சிறிதளவு வெட்டி அதனுள் வதக்கிய கலவையை வைத்து அதன்மேல் எலுமிச்சை சாறு, புளித்தண்ணீர், பொரித்த எண்ணெய், உப்பு கரைத்த தண்ணீர் தெளித்து கொத்தமல்லி இலை தூவினால் முட்டை பேஜோ ரெடி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன