இட்லி ,தோசை, சப்பாத்தி னு எல்லாத்துக்கும் ஒரே சைடிஸ்- முருங்கைக்காய் பெப்பர் சிக்கன் கிரேவி!

By Velmurugan

Published:

இட்லி ,தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள விதவிதமான சைடிஸ் பண்ணாமல் ஒரே சைடிஸா முருங்கைக்காய் பெப்பர் சிக்கன் கிரேவி செய்து பார்க்கலாமா…

இதை சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டாழும் சுவை அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ.

முருங்கைக்காய் – 4.

வெங்காயம் – 200 கிராம்.

தக்காளி – 100 கிராம்

பச்சை மிளகாய் – 4.

இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

மிளகுத் தூள் – 4 தேக்கரண்டி .

மிளகாய் தூள் – காரத்தின் தேவைக்கேற்ப

மிளகாய் வற்றல் – 6.

கொத்தமல்லி இலை – கைப்பிடி அளவு .

மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி .

உப்பு – தேவைக்கு ஏற்ப.

எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

யசோதா ட்ரெய்லரைப் பகிர்ந்து – ‘சமந்தாவை காதலித்தேன்’ என கூறிய மாஸ் ஹீரோ!

சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். முருங்கைக்காயையும் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, முருங்கைக்காய், சிக்கன் சேர்த்து ஒன்றாக வதக்கவும். அடுத்து அதில் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

தளபதி 67 பற்றி லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

சிக்கன், முருங்கைக்காய் நன்கு வெந்ததும், மிளகுத் தூளைச் சேர்த்துக் கிளறவும். கிரேவி திக்கான பதம் வந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இப்போது முருங்கைக்காய் பெப்பர் சிக்கன் கிரேவி ரெடி.

Leave a Comment