சுவை நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் கூட்டு!!

By Staff

Published:

78367979ca2a79486368f777119c0322

மஞ்சள் பூசணிக்காயில் இப்போது நாம் சுவையான கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
பூசணிக்காய் – 2 துண்டு 
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன் 
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 ஸ்பூன் 
கடுகு – 1/2 ஸ்பூன் 
உளுந்து – 1/2 ஸ்பூன் 
வெங்காயம் – 1 
தேங்காய் – 1/ 4 மூடி 
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு 
உப்பு – தேவையான அளவு

                             
செய்முறை:
1.    பூசணிக்காயின் தோலினைச் சீவி  சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தேங்காயினைத் துருவிக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், பூசணிக்காய் சேர்த்து வதக்கவும்
4.    அதன்பின்னர் உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து கிளறி தண்ணீர் சேர்த்து வேகவிட்டு, அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து இறக்கினால் பூசணிக்காய் கூட்டு ரெடி.

 

Leave a Comment