கொழுக்கட்டையினை பொதுவாக நாம் அரிசிமாவில் தான் செய்வோம். இப்போது நாம் கோதுமை மாவில் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
கோதுமை மாவு – அரை கப்,
தேங்காய் – 1 மூடி,
வெல்லம் – 2,
ஏலக்காய் – 2,
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. கோதுமை மாவை வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளவும். அடுத்து கோதுமை மாவுடன், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். ஏலக்காயினை பொடித்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி உருண்டைகளாகப் பிடிக்கவும்.
3. அடுத்து கோதுமை மாவினை தோசைக் கல்லில் வைத்து நடுவில் பூரணத்தை வைத்து மூடி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக விட்டு எடுத்தால் கோதுமை மாவு கொழுக்கட்டை ரெடி.