விரால் மீன்களில் அதிக அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியினை அதிகரிக்கச் செய்கின்றது. இப்போது நாம் விரால் மீனில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
விரால் மீன் – 500 கிராம்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1/4 கிலோ
புளி – எலுமிச்சை அளவு
தனியா தூள் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 5
கடுகு – 1 ஸ்பூன்
வெந்தயத் தூள் – 1/4 ஸ்பூன்
சீரகத் தூள் – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை:
1. மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
3. அடுத்து தனியா தூள், மிளகாய் தூள், வெந்தயத் தூள், சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
4. அடுத்து அதில் புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு மீன் துண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும்.
5. குழம்பு கொதித்த பின்னர், அதில் கறிவேப்பிலை தூவி இறக்கினால் விரால் மீன் குழம்பு ரெடி.