முந்தைய நாட்களில் அதிக அளவிலான உப்புக் கண்டம் குழம்பானது வீடுகளில் செய்யப்படும். இந்த உப்புக்கண்டம் குழம்பினை செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
தேவையானவை:
உப்புக்கண்டம் – 250 கிராம்
கடுகு – 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 3
சோம்பு- 1 ஸ்பூன்
இஞ்சி-பூண்டு பேஸ்ட்து – 3 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – 1
செய்முறை :
1.வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கி, மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தேங்காயை மிக்சியில் போட்டு அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், கடுகு, சோம்பு போட்டு தாளித்து, இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
3. அடுத்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, அரைத்த மசால் தூள், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
4. அடுத்து உப்புக்கண்டம், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு உப்புக்கண்டம், தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் உப்புக் கண்டம் குழம்பு ரெடி.