ஊறுகாய் வகைகளில் நாம் பொதுவாக மாங்காய், எலுமிச்சை ஊறுகாய் வகைகளையே செய்து சாப்பிடுவோம், இன்று ரொம்பவும் ஈசியான தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
தக்காளி – 1 கிலோ,
பூண்டு – 3 பூண்டு,
காய்ந்த மிளகாய் – 15,
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்,
துருவிய வெல்லம் – 3 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் – 1 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும், பூண்டை தோல் உரித்து வைக்கவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய், வெந்தயம், கடுகு போட்டு தாளித்து அடுத்து பூண்டை வதக்கவும்.
3. அடுத்து தக்காளியைச் சேர்த்து மஞ்சள்தூள், வெல்லம், பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
4. அடுத்து நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறினால் தக்காளி ஊறுகாய் ரெடி.