பணியாரம் என்றாலே நம்மில் பலருக்கும் பிடித்த உணவு வகையாகும். இத்தகைய பணியாரத்தை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரியாக இனிப்பில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
பச்சரிசி- 1 கப்,
புழுங்கலரிசி – 1 கப்,
உளுந்து – அரை கப்,
வெந்தயம் – 1 ஸ்பூன்,
வெல்லம்- 1 கப்
தேங்காய் – ½ மூடி,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊறவிடவும்.
2. அடுத்து இதனை கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லத்தினைக் கொட்டி பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
4. அடுத்து தேங்காயினைத் துருவிக் கொள்ளவும்.
5. இறுதியில் இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து மாவினைக் கலக்கி பணியாரக் கல்லில் ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் இனிப்புப் பணியாரம் ரெடி.