சுவையான இனிப்பு ஜிலேபி!!

By Staff

Published:

33003d30ed01bcb85c23bfa77554fdb5-1

ஜிலேபியினை பொதுவாக நாம் பேக்கரியில்தான் வாங்கிச் சாப்பிடுவோம், அந்தவகையில் இப்போது வீட்டிலேயே ஜிலேபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை :
உளுந்து – கால் கிலோ
அரிசி – 30 கிராம்
சர்க்கரை – 1 கிலோ
கேடரி கலர் பவுடர்- சிறிதளவு
நெய்- 10 மில்லி
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை :
1. உளுந்து அரிசி இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கேசரி பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி ஜாங்கிரி பிழியும் தட்டில் வைத்து பிழிந்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
3. அடுத்து ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி அதில் ஜிலேபியைப் போட்டு எடுத்தால் இனிப்பு ஜிலேபி ரெடி.

Leave a Comment