சுவையான சேப்பங்கிழங்கு குருமா குழம்பு!!

By Staff

Published:

27116b2f079a15f78af9fb0e42e85749-1

தேவையானவை :
சேப்பங் கிழங்கு   – 1/2 கிலோ
தக்காளி – 2
சின்ன வெங்காயம் – 10
மஞ்சள் தூள்  – ¼ ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
தனியாத் தூள் – ½ ஸ்பூன்
சோம்பு- ½ ஸ்பூன்
தேங்காய் – கால் மூடி 
பூண்டு -5
கறிவேப்பிலை  – சிறிதளவு
எண்ணெய்   – தேவையான அளவு

செய்முறை :
1. சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். 
2. பூண்டின் தோல் உரித்துக் கொள்ளவும். அடுத்து மிக்சியில் சோம்பு மற்றும் தேங்காய் சேர்த்து தேங்காய்ப் பால் பிழிந்து கொள்ளவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியை சேர்த்து வதக்கி சேப்பங்கிழங்கினைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
4. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
5. இறுதியில் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்கவிட்டு கறிவேப்பிலை போட்டு இறக்கினால் சேப்பகிழங்கு குருமா குழம்பு ரெடி.

Leave a Comment