பொதுவாக புட்டு என்றால் நாம் அரிசி மாவில்தான் செய்வோம். ஆனால் இப்போது நாம் ரவையில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை :
ரவை – கால் கிலோ
சர்க்கரை – 100 கிராம்
தேங்காய் துருவல்- அரை கப் ,
உப்பு – சிறிதளவு
நெய் – 3 ஸ்பூன்
செய்முறை :
1. வாணலியில் ரவையை போட்டு வறுத்துக் கொள்ளவும். அடுத்து ரவை ஆறியதும் அதனுடன் லேசாக உப்பு, சர்க்கரை, தேங்காய் துருவல், நெய் கலந்து பிசையவும்.
2. அடுத்து பிசறிய மாவினை புட்டுக் குழாயில் போட்டு 15 நிமிடம் வேக விட்டு எடுத்தால் ரவா புட்டு ரெடி.